கோவிலின் அஸ்திவாரம் பலமாக அமைக்கப்படுகின்றது.
2nd September 2008
கோவிலிலுள்ள கற்கள் முழுதும் அகற்றப்பட்டு சீராக அடுக்கப்பட்டு விட்டன. அஸ்திவாரமே சுத்தமாகயில்லாமல் கோவில் அமைக்கப்பட்டுள்ளது கண்டு ஆச்சர்யமடைந்தோம். கலாபகாலத்தில் ஏதோ ஒரு அவசரகதியில் கோவில் கட்டியிருப்பார்களோ!
என்று எண்ணத் தோன்றுகிறது.
பழைய நாகப்படுக்கை உபயோகப்படாது என்று ஸ்தபதி அறிவித்தபடியால் அருகில் ஒக்கரை என்ற ஊரில் ஒரு தோ்ந்த கல்தச்சரிடம் ஆதிசேஷபீடம் அமைக்கவும், இந்த பழைய ரெங்கநாதரை பழுது நீக்கி சரிபார்க்கவும் ஒரு சிறுதொகை முன்பணமாக கொடுத்து அவர்கட்கு கிராம சபையாரின் சார்பில் அனுமதியளிக்கப்பட்டது.
சுமார் 6அடிக்கு, கோவில் இருந்த இடத்தைச் சுற்றிலும் பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment