Tuesday, September 28, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-04 27.09.2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!

வளர்ச்சி-04 27.09.2010

சக்திவிகடனில் கோபுரப்பட்டியினைப் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாதபோதே திரு. சுவாமிநாதன் அவர்களின், கோபுரப்பட்டியினைப் பற்றிய ஒருபக்கக் கட்டுரை அவரது எழுத்துத்திறமை..!. என்னை மிகவே வியப்படையச் செய்த ஒரு விஷயம்..!


கோபுரப்பட்டியிலிருந்து அடியேனது இல்லத்திற்கு வந்தபின்
சென்னையிலிருந்து வந்த அம்மையார் வெளிநாட்டில் வசிக்கும்
ஒரு அடியவர் ஒருவருக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டார். கோபுரப்பட்டியின் உடனடி பணத்தேவைப் பற்றி எடுத்துக் கூறினார். தானும் ரூ.10000/- காசோலையினைத் தந்தார்.


ஆடிட்டர் திரு. இராமச்சந்திரன் கோபுரப்பட்டி கோவிலைப் பற்றிய அனைத்துக் கோப்புக்களையும் அதற்குரிய அலுவலகம் மற்றும் தனியார்களை சந்தித்து சரிபார்த்து, ஆதிநாயகப்பெருமாள் பெயரிலேயே பட்டா இருந்ததையும் கண்ணுற்று திருப்தியடைந்தார். தாலுகா ஆபிஸில் கோபுரப்பட்டி சுற்றியிருந்த மூலபட்டாவில் உரிமையாளர்கள் பெயர்கள் பெரும்பாலும் ஐயங்கார்கள் மற்றும் ஐயர் என்று முடிந்திருந்தது. ஒரு காலத்தில் கோபுரப்பட்டி முழுதும் பிராம்மணர்களால் நிரம்பப்பெற்று பெருமாளை மகோன்னதமாக கொண்டாடியிருக்க வேண்டும்..!


திருப்பணிகள் செய்துவிடலாம் என்ற எண்ணம் வலுவடைந்தது.
பாலாலயத்திற்கான நாள் 16 ஏப்ரல் 2008 என தீர்மானிக்கப்பட்டது.
பாலாலயத்தினை சிரத்தையாகவும் விமரிசையாகவும் செய்தோம்.

அடியேனும் எனது நண்பர்களும் கைங்கர்யமாகவே எவரிடத்தும், எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் இதனைச் செய்தோம்.

பாலாயம் முழுதும் முடிந்து வெளியே வந்தோம்.


பாலாலயம்..!



சில பத்திரிக்கையாளர்கள், கிராமத்திலுள்ள ஒரு பகுதி மக்கள் சிலர் எங்களிடத்து நெருங்கினர். அதில் ஒருவர் “யாரைக் கேட்டு பாலாலயம் செய்தீர்கள்..! ஏன் எங்களையெல்லாம் பார்த்தால் இந்த கோவிலுக்குத் தொடர்புடையவர்கள் போன்று தெரியவில்லையா..! இந்த கோவிலை வைத்து ஏதோ ஒரு பெரியஅளவில் பணம் சுருட்டப்பார்க்கின்றீர்கள் அல்லது இங்கு புதையல் இருப்பதாக நம்பப்படுகின்றது..! அதனை கைப்பற்ற வந்த திருடர்கள் போல் உள்ளீர்கள்...! இது மன்னர்கள் கட்டிய கோவில் - கைவைப்பதற்கு நீங்களெல்லாம் யார்...? ” என்றெல்லாம் சரமாரியாக எங்களை ஏசினார்கள். நானும் ஆடிட்டரும் செய்வதறியாது திகைத்து நின்றோம். ஏதும் பேச வரவில்லை..! எங்களோடு ஒத்துழைத்த சில கிராம மக்களும் ஏதும் பரிந்து பேசவில்லை..!



பத்திரிக்கையாளர்களுமே, ”ஏதேது..! நிறைய பணம் புரண்டிருக்கும் போலிருக்கின்றதே...! பாலாலயத்திற்கே பல ஆயிரம் செலவழிந்திருக்கும் போலுள்ளதே” என்று நக்கலாக எங்களை சீண்டினர்.



ஏதும் பேசினால் பிரச்சினைப் பெரிதாகும் என்று உணர்ந்தோம்...! மௌனம் காத்தோம்...! அவர்கள் தரப்பிலும் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்தேன்..! ஊரும் புதிது..! மக்களும் புதியவர்கள்..!

அவர்களுக்குமே நாங்களிருவரும் புதியவர்கள்..! அறிமுகம் இல்லாதவர்கள்..! அறிமுகமே இல்லாதவர்களை நம்புதல் என்பது எப்படி சாத்தியம்.? அவர்கள் கேட்பதும் நியாயம்தானே..!



கோபுரப்பட்டிப் பெருமாள் கொடுத்த “முதல் சோதனை“ என்று

நினைத்துக்கொண்டோம்...!



கோபுரப்பட்டித் தொடர்பாக நாம் நம் வலைத்தளத்தினில் வெளியிட்ட ஒரு அறிக்கை



Sri :||

GOPURAPATTI ......?





Namaskarams….

Prologue
During the Invasion by the Unknown Rulers on South India in the 12th and 13th Centuries in the intention of looting our temples, our SampradhAyam was protected by great AchAryaas. Although the Srirangam Temple was defended at a great cost and the nithyArAdhanam was reinstated, few temples in and around were not fortunate. Those ruins at these sites remind us of the tragedies of those days. One such temple is brought to your notice in this note.

I am exchanging my views and through this Medium of communication with you (of Namperumal Bakthas) all.

*******()()()()*******



At the outset, we come across many socio-cultural errors made in the history. On the curst, we blame the erroneous people alone. But when we anlayse closer, we conclude that the environmental factors which staged such errors, who brain stormed such incidences, who didn’t even bothered to raise voice against such incidence till now, who never come forward to rectify those effects of such errors, are all to be blamed.

Keeping the above factors in mind, we can look into this aspect also. The socio-cultural behavior of the inhabitants of a place is mainly dependent on the hub of the place. For instance, if there is a temple as the hub of all activities, people will have in faith & fear to GOD. In case if it is otherwise, ie., a club house of anti social activities, then… it is not required to explain. But, can u imagine, what if the hub is a ruined temple ……?

Of course, the soul source (outcome) of this note is based on one such flourished Vishnu temple which was ruined by the invaders of South India in the past and still in the same stage crossing centuries after centuries, which is alarming.

Azhagia Manavalam is a village near Trichy, (Located on the banks of Coleroon). Gopura Patti is a hamlet situated nearly 2KM from Azhagia Manavalam. A Vishnu temple, which once might have been built with great craftsmanship and flourished, was ruined by the invaders with an impression that Srirangam Namperumal would have been fortified / safe guarded there. The heart-pricking factor is that, still the hamlet and the temple are in same wreckages.

Are there any such worshiping places of other religions in such rubbles…? Whom to blame now…? Invaders! or our own ancestors who maintained such leftovers unnoticed…!

Known these factors…? Will we act…?

Click here for seeing the wreckages of Gopura Patti (A symbol of our negligence over centuries)
















....வளர்ச்சித் தொடரும்...!

No comments: