21st December' 2008
நான் காண்பது மெய்தானா? என்று சந்தேகப்படும் அளவிற்கு கோபுரப்பட்டியின் மூல விக்ரஹத்தினை செம்மையாக, படுநோ்த்தியாக திருத்தியிருக்கின்றனர் கல் தச்சர்கள். மெய்மறக்கச் செய்தார் மூலவர்.
வரும் 21.01.2009 (தை 8ம் தேதி) ஏகாதசி திதியன்று கோபுரப்பட்டியின் மூலவர், தம் பாம்பணை சஹிதமாய் கோபுரப்பட்டிக்கு, தம் ஆஸ்தான இடத்திற்கு எழுந்தருளவிருக்கின்றார். ஏறத்தாழ 650 வருடங்களுக்குப் பிறகு கோலகலம் கொண்டாடவிருக்கின்றது கோபுரப்பட்டி!
புதுப்பொலிவோடு வரும் இந்த பழமை வாய்ந்த மூலவரை. சிறப்பாக வரவேற்க கோபுரப்பட்டியும் அருகிலுள்ள கிராமங்களும் தயாராகி வருகின்றன. காண்பதற்கு அரிய இந்த மூலவர் புறப்பாட்டினை நாம் மீண்டும் தரிசிக்கவா முடியும்! நீங்களும் தயை கூர்ந்து வாருங்களேன்!
அன்போடு அழைக்கின்றோம் அரங்கன் சார்பில்!
ஆசையோடு எதிர்பார்க்கின்றோம் உங்களனைவரையும்!
No comments:
Post a Comment