ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்குப் பின் தமது திருமேனியை தம் பக்தர்களுக்காக திருத்திக்கொண்டு பாம்பணை ஸஹிதமாய் தமது ஆஸ்தானம் திரும்பினார் ஸ்ரீரெங்கநாதர். மெய்மறக்கச் செய்தார் கூடிய அனைவரையும்! கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன் ஆனார்!. ஏறத்தாழ 13 மணி நேரம் கோபுரப்பட்டியின் மக்கள் அனைவரையும் அவர்கள் தம் நிலை மறந்து, கவலை துறந்து, தம் கூடவேயிருக்கும்படி ஆட்கொண்டார்!. கோலாகலத்தினால் குதூகலித்தது கோபுரப்பட்டி!.
ஆதிசேஷனை பீடத்தில் எழுந்தருளப்பண்ணும் போது கருடன் வட்டமடித்தப்போது, கோவில் வளாகத்திலுள்ள மக்கள் சிலிர்த்துப் போனார்கள்!. மந்தஹாசனாய் சிரித்தார் அரங்கன்!
No comments:
Post a Comment