Tuesday, September 14, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-02 14.09.2010




தஞ்சை மாமணிக்கோவிலைப் பற்றிச் சொன்னேன் அல்லவா..?

அது பரந்து விரிந்த, ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய விஷ்ணுத்தலம் என்று இப்போதுள்ள அதன் பரிதாப நிலையிலும் நன்கு விளங்கிற்று. ஆனால் இதனை சீர்செய்ய நம் ஆயுளும், பலமும் கண்டிப்பாகப் போதாது. அரசாங்கமும் இதில் எல்லாம் நிச்சயமாக செயல்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..!

தயைகூர்ந்து கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியினை திறந்து பாருங்கள். நீங்களே வருந்துவீர்கள்..! ஹூம்ம்... இம்மாதிரி இன்னும் எத்தனைத் தலங்களோ...?

http://thanjaimamanikkoil.blogspot.com/

&

http://picasaweb.google.co.in/arvindsrgm/Vanpulanzholai?authkey=Gv1sRgCOO8tPqg0dX5NQ&feat=directlink#


நல்லவேளையாக பலநுாறு வருடங்களாக பாழ்பட்டபோதிலும் கோபுரப்பட்டிக் கோவிலினை, மணவாள மாமுனிகளின் திருவரசு போன்றோ, தஞ்சை மாமணிக் கோவிலான “வன்புலாம்சோலை“ போன்றோ எவராலும் ஆக்ரமிக்கப்படாமல் இருந்தது, நாம் செய்த மிகப்பெரிய பாக்யமாகும்.

4.11.2007 - கேமிராஸஹிதமாக நானும் என்னுடைய சகாக்களுமாக கோபுரப்பட்டி நோக்கி பயணித்தோம். கோவிலை அடைந்தோம். ஒரே முட்காடாக பரந்திருந்தது. கோவில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கித் தவித்திருந்தது. எப்படியாவது மூலஸ்தானம் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது..! மேல் தளம் சென்றோம். ஒரு பெரிய ஓட்டை...!


(அந்த பெரிய ஓட்டை..!)

உள்ளே குதித்துவிட்டேன்..! அப்போது கண்டகாட்சி அப்பப்பா...! விவரிக்க இயலாது...! மூலவர் மனதினில் பதிந்தார்..! எங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஒரு பிரதிபிம்பம்

பரிதாபமாக கிடந்த நிலை கிறங்க அடித்தது..! தவிக்க வைத்தது..!

மூலஸ்தானத்தில் ஆங்காங்கு சில பாம்பு புற்றுகள்...!

(கோபுரப்பட்டியின் அன்றைய நிலை)



மேலே வந்தோம். எதிர் வீட்டில் 'பரமேஷ்' என்ற ஒரு பையன், எங்களைப்பார்தது அருகில் வந்தான்..! ” ஏன் சார் உள்ளே குதித்தீர்கள்..! அங்கு நல்லபாம்புகள் சில உள்ளது..! ” என்றதுதான் தாமதம்.. என் சகாக்கள் இரண்டு மூன்று பேரைக் காணவில்லை..!


அங்குள்ள அரங்கனிடத்து ஆதிசேஷனாவது அக்கறைக் கொண்டு அருகிலேயே இருக்கின்றாரே என்று ஆறுதல் அடைந்தேன்..!


பலரும் காணும் வள்ளம் நம்முடைய இந்த வலைத்தளத்தினில் கோபுரப்பட்டியின் பரிதாபநிலையினைப் பிரசுரித்தேன்...!

....வளர்ச்சித் தொடரும்...!

No comments: