Wednesday, June 29, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-15 29.6.2011

ஸ்ரீ குணரத்னகோசத்தில் பட்டர் தாயாரைப் பார்த்து ஒரு ஸ்லோகத்தில்



”ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.”

-(நன்றி திரு ஸ்ரீதரன் www.namperumal.com)

என்று வர்ணிககின்றார். இந்த வர்ணனை அடியோங்களைப் பொறுத்தவரை
முழுவதும் உண்மையாக ஆனது. எந்தவித மூலதனமும் இன்றி தாயாரின் கடாக்ஷம் ஒன்றே பெருந்தனமாகக் கொண்டு ஆரம்பித்த இந்த கோபுரப்பட்டியின் கைங்கர்யத்தில் தாயாரின் அற்புதமான கடாக்ஷம் எழுத்தால் விவரிக்க இயலாதது.



இங்கு விக்ரஹரூபத்தில் பெருமாளைக் கூட விட்டுவிட்டு தாம் மட்டும் தனியே சென்னைக்குப் பயணித்தாள். அங்கு உருப்பட்டூர் திரு.சௌந்திரராஜ ஸ்வாமியின் இல்லத்தில் சுமார் ஒரு வருடகாலம் அதியற்புதமாய் ஆராதிக்கப்பட்டாள். சென்னையிலும், ஏன் உலகமெங்கும் தாயாரின் கடாக்ஷமும், கோபுரப்பட்டியின் கைங்கர்யமும் பரவலாயிற்று. கோபுரப்பட்டியினையும், தாயாரையும் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பரக்கப் பேசவைத்தவர் உருபட்டூர் ஸ்வாமி அவர்கள். தாயார் அவரது இல்லத்தில் ஒரு மூத்த உறுப்பினராகவே ஆனாள்.



அங்கிருந்தபடி கோபுரப்பட்டியின் கைங்கர்யத்திற்கு அவர் ஒப்புக்கொண்டதைவிட இருமடங்கிற்கும் அதிகமாகவே செல்வம் சேர்த்தாள்.இதைத்தவிர நிறைய வஸ்திரங்கள், நகைகள, பூஜா பாத்திரங்களும் கோபுரப்பட்டிக்குச் சேர்ததாள்.



பிரதிஷ்டை ஏதும் ஆகாமலிருந்தபோதே தாயாரின் கருணையும், லிலைகளும் அபாரமாய் இருந்தது. நிறையபேர்களின் வேண்டுதல் நிறைவேறியது. எங்களின் பெரும்பாரமும் தீர்ந்தது. ஆம்..! தாயார் ஸந்நிதி பணி நிறைவேறி மீதமுள்ள பணம் பெருமாள் ஸந்நிதி நிர்மாணத்திற்கும் பயன்பட்டது..!

No comments: