Friday, November 5, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-09 05.11.2010


துறையூர் ஒக்கரை சிற்பகூடத்தில் ஆதிசேஷனும், ஆதிநாயகரும்.
ஆதிசேஷனில்லாது அரங்கரா..?



இங்குள்ள ஆதிசேஷன் படுக்கை மூன்று துண்டாக துண்டாடப்பட்டிருந்தாலும் அரங்கன் அருகிலேயேதான் கிடந்தது. இப்போது அரங்கன் மட்டும் தனியாக சிற்பகூடத்திற்கு பயணப்பட்டு விட்டார். துண்டாகிப்போன ஆதிசேஷன் இனி பயன்படமாட்டார்.

காங்கோ நண்பர் கொடுத்தப் பணத்தில் ஒரளவு அஸ்திவாரம் தோண்டுவதற்கும் அமைப்பதற்கும்தான் சரியாகயிருக்கும்.


அந்த ஆதிசேஷனே அருள்பாலித்து அமைத்துக்கொடுக்கட்டும்..!

நம்முடைய முயற்சியில் ஏதும் இல்லை..! அவனது அருளினால்தான்
எதுவும் சித்திக்கும்..! ஆதிநாயகர் இதனை எங்களுக்கு அவ்வப்போது உணர்த்தினாலும், மனம் தவியாய் தவிக்கின்றது. ஒவ்வொரு செயல் செய்யும்போதும், என்னமோ நம்மால்தான் இந்த காரியம் நடக்கின்றது போல் ஒரு பரபரப்பு..! தேவையில்லாத படபடப்பு..! அவசரம்..! கடைசியில் உஹூம்..! ஒன்றும் முடியாது..!

ஹே..! பகவானே..! நீயே பார்த்துக்கொள்..! இந்த காரியம் உன்னால்தான் முடியும்..!
நீதான் எனக்குத் தகுந்த நபர்களை காட்டியருள வேண்டும்..!

இந்த முறையும் காட்டினார்..! இந்த முறை தவித்தப்போது கோவையிலிருந்து

திருமதி. பத்மினி அம்மாள் (இவர்கள் PSG Group-ஐ சார்ந்தவர்) ஸ்ரீரங்கம் அரங்கனை தரிசிக்க வந்திருந்தார்.

அவர்கனை அழைத்துக்கொண்டு போய் காண்பித்தோம். ஆதிசேஷனை உருவாக்கும் பணியும், ஆதிநாயகனது உருவ சீரமைப்புப் பணியும், அரங்கன் அவர்களுக்கென ஓதுக்கியுள்ளார் என்று அறிவித்தோம்.

உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

நம் வேண்டுகோளை ஆதிநாயகன் ஏற்றார். தகுந்த நபரை வரவழைத்து எங்களுக்குக் காட்டியருளினார். அவரை ஏற்றுக்கொள்ள வைத்தார் - இதுதான் உண்மை.

ஓரேயடியாக படியளக்காவிடினும், தொய்வில்லாத படிப்படியான முன்னேற்றத்தினை
கோபுரப்பட்டி கண்டுவருவது எங்களுக்கு ஒரு தெம்பையும், புத்துணர்ச்சியும் கொடுத்தது.

ஒரு வழியாக அஸ்திவாரம், ஆதிசேஷ படுக்கை, ஆதிநாயகன் திருவுருவ சீரமைப்பு
மூன்றும் சிரமம் இல்லாமல் முடிந்தது.



இந்த நிலைமையில் எனக்குச் சென்னை - பள்ளிக்கரணையிலிருந்து ஒரு
அலைபேசி அழைப்பு வந்தது. பேசியது ஒரு சிறு பாலகன். கோபுரப்பட்டியினைப்
பற்றி ஏதும் அறியாதவன். ஒரு தெய்வீக உணர்வின் (intution) உந்துதலினால்
பேசத் தொடங்கினான்..!


சில விஷயங்கள் மிகுந்த அதிர்ச்சியளித்தன. சில ஆச்சர்யமடையச் செய்தது.
பல விஷயங்கள் எச்சரிக்கைச் செய்தது..!


-தொடரும்..!

No comments: