Saturday, January 22, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-13 22.1.2011

நாம் கோவில் விஷயமாக ஒருவரைக் காண்பது என்பதைக் காட்டிலும், கோபுரப்பட்டியினைப் பொருத்தவரை, பகவான் சம்பந்தப்பட்ட நபரை, எங்களைக்
காணுமாறுச் செய்தான் அல்லது காட்டிக்கொடுத்தான் என்பதுதான் சாலப்பொருந்தும்.



தாயார் ஸந்நிதி கட்டுமாணப்பணிக்கு யாரை அணுகுவது என்ற சிந்தனையில்லாமலேதான் (கவலையில்லாமல் கூட என்று சொல்லலாம்), அன்று ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குப் பணிக்குச் சென்றேன்..!



தாயார் ஸந்நிதி மூலஸ்தானம்..! என்னுடன் கூட அன்று பண்டாரி சுரேஷ் என்னும் அருமை நண்பர்..! இவர் கோபுரப்பட்டி வளர்ச்சிப் பற்றி கேட்டப்படியிருக்கும்போது, திடீரென நான் அவரிடம் “நீ ஏன் தாயார் மூலவர் கைங்கர்யத்தினை ஏற்கின்றயா..?“ என்று கேட்டபோது ஒரு நிமிடம் அவரது ரோமங்கள் இறையுணர்வில் சிலிர்த்து அடங்கியமைக் கண்டேன். நானே இந்த கைங்கர்யத்திற்காக இவரிடம் பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.



இதெல்லாம் தாயாரின் திருவுள்ளம்..!



பண்டாரி சுரேஷின் கண்களில் ஆனந்த கண்ணீர்..! மிகுந்த சந்தோஷமுடன் ஓப்புக்கொண்டார்.



ஓக்கரை(துறையூர்) திரு. சேகர் (ஏற்கனவே கோபுரப்பட்டி விக்ரஹங்கள், ஆதிசேஷன் முதலானவற்றைச் செவ்வனேச் செய்தவர்) அழைக்கப்பட்டார்.



சுமார் ரூ.20000/- மதிப்பீட்டீல் தாயார் மூலவர் திருவுருவம் அமைக்க தீர்மாணம் செய்யப்பட்டு முன்பணம் கொடுக்கப்பட்டது.



இன்று (22.1.2011) கூட தாயார் ஸந்நிதி பணிதான் எனக்கு..! என் கூட பண்டாரி திரு.சுரேஷ் அவர்கள்தாம்..! அவர் நண்பர் ஒருவர் தரிசிக்கவந்த போது சுரேஷின் மூலவர் கைங்கர்யத்தினைப் பற்றிச் சொன்னேன்..! அதற்கு திரு. சுரேஷ் அவர்கள், ”இதெல்லாம் நான் நினைத்தேக்கூட பார்த்திராத ஒரு பாக்யம்..! எவ்வளவோ பேர் நீங்கள் சொல்வதைக் கேட்கயிருக்கையில், சாதாரணமான எனக்கு இந்த பாக்யம் அமைந்தது பெரும் புண்ணியம்..!” என்று பணிவாக சந்தோஷமாகச் சொல்கையில் அவரது எளிமை, பண்பாடு கண்டு வியந்தேன்..!



தாயார் ஸந்நிதி நிர்மாணம்...? யாரைக் காண்போம்..? என்ற எதிர்பார்ப்போடுயிருந்தேன்..!

No comments: